பொள்ளாச்சி பலாத்காரம்.. கைதானவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!

பொள்ளாச்சி பலாத்காரம்.. கைதானவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!
Advertisement
Advertisement

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள திருநாவுக்கரசு உட்பட நால்வர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.பொள்ளாச்சி பலாத்காரம்.. கைதானவர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பலை சேர்ந்த சபரி, வசந்த குமார், சதீஷ் குமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவிட்டார்.

இதன்பிறகு சில நிமிடங்களிலேயே, மற்ற மூவரையும் அதேபோல குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.