யானை நெருஞ்சில்….! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து…!

0
106
யானை நெருஞ்சில்....! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து...!
Advertisement
Advertisement

யானை நெருஞ்சில் என்று அழைக்கப்படும். பெரு நெருஞ்சில் இலையை ஒரு கைப்பிடி அளவு  எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டால் ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாகு போன்று ஒரு திரவம் நீரில் கலந்து  இருப்பதைப் பார்க்கலாம்.

அதைத் தனியாக எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல்சூடு, தாது இழப்பு குணமாகும்.

யானை நெருஞ்சில் இலைச்சாறு 50 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பால் அல்லது மோருடன் குடித்து வர சிறுநீருடன் இரத்தம்  போவது நிற்கும்.

யானை நெருஞ்சிலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க  அழுக்கு, கறை அகலும்.

யானை நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி நீரில் அலசி பிறகு, புளித்த கஞ்சி தண்ணீரில் இதனை 10 நிமிடம்வரை மூழ்கும்படி  செய்ய வேண்டும்.

இதனை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதால், சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீர் வழியாக  வெளியேறும்

யாணை நெருஞ்சில் இலையை, அருகம்புல் சமூலம் ஒன்றையும் சேர்த்து ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு முக்கால் லிட்டராகச்  சுண்டக் காய்ச்சி வடிகட்டி,

அதில் திப்பிலி குங்குமப்பூ, ஒரு சிட்டிகை சேர்த்து மறுபடியும், கால் லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி,

3 நாள்களுக்கு 2 வேளை குடித்து வர உடல் சூடு, நீர் வடிதல், கண் எரிச்சல், சொறுக்கு மூத்திரம், நீரிழிவு,  வேகமின்றி அடைப்பட்டதுபோல சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119