தங்க விலை அதிகரிப்பு..!

42
613
தங்க விலை அதிகரிப்பு..!
Advertisement

தங்க விலை அதிகரிப்பு..!

Advertisement

சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 208க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று திடீரென உயர்ந்தது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.22 ஆயிரத்து 208-க்கு விற்கப்பட்டது.

22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 776-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 748க்கு விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் கூறும்போது:

“தங்கம் ஏற்றுமதியில் மத்திய அரசு சில புதிய மாற்றங்களை செய்துள்ளது.

அதாவது, 8 காரட் முதல் 22 காரட் வரையிலான தங்கத்தை ஏற்றுமதி செய்துக் கொள்ளலாம்.

ஆனால், 24 காரட் தங்கத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளனர்.