தங்கம் விலை இன்று குறைவு..!

தங்கம் விலை இன்று குறைவு..!
Advertisement
Advertisement

சென்னையில்இதுவரை இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.25,384-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் வரை குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை! 

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,161 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,288-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 96 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,308 ஆகவும், சவரனுக்கு ரூ.26,464-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை! 

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 43.30 காசுகளுக்கும், கிலோ ரூ.43,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.