தொடர்ந்து உயரும் தங்கவிலை…!

0
183
தொடர்ந்து உயரும் தங்கவிலை...!
Advertisement
Advertisement

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் நிலவி வருகிறது.

இதுவரை இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.25,160-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை!

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,167 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 176 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,314 ஆகவும், சவரனுக்கு ரூ.26,512-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை! 

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 42.80 காசுகளுக்கும், கிலோ ரூ.42,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.