தங்கம் விலை கிடுகிடு உயர்வு…!

தங்கம் விலை கிடுகிடு உயர்வு...!
Advertisement
Advertisement

திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்தில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.3000 க்கு மேல் விற்பனையாகி வந்தது.

இது படிப்படியாக உயர்ந்து, இன்று ரூ.3075 என்ற புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

இன்றைய (ஜன.,10) காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.24 ம், ஒரு சவரன் ரூ.192 ம் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று, ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.3075 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.32,290 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.24,600 க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையிலும் உயர்வான போக்கே காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.42.80 ஆக உள்ளது.