சாலை நலம் பெற…..! நாற்று நடும்… நூதனப் போராட்டம்..

பறையான்குளம்

0
397
Advertisement
Advertisement

நகரங்களில் தொடங்கிய நாற்றுநடும் நூதனசாலை மறியல் போராட்டம் தற்போது கிராமப்புறங்களிலும் துவங்கிவிட்டது.

இது நமது நாட்டின் பொதுத்துறை வளர்ச்சியின் மேலாண்மைத்திறனை….! பெருமை படுத்துகிறது.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து பறையான்குளம் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து…. பொதுத்துறையின்… சாலை சீரமைப்பு சிறப்பை பறைசாற்றிக் கொண்டது.

இதன் காரணமாக அவசர தேவைக்கு கூட 108 ஆம்புலன்ஸ் வர மறுக்கிறது.
சாலையை காரணம் காட்டி பஸ் போக்குவரத்து நின்று விட்டது…..! எனவே பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் நடந்து செல்ல வேண்டிய அவலத்தை… மாவட்ட ஆட்சியர் எம்பி எம்எல்ஏ அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் பல முறை  புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை…!

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம பொது மக்கள் சாலையில் நாற்று நடவு செய்யும் போராட்டம் நடத்தினர்.

SHARE