வெறுப்பேற்றும் வரலட்சுமி ..?

35
617
வெறுப்பேற்றும் வரலட்சுமி
Advertisement
Advertisement

தனி ஒருவனாக வந்த அச்சம் என்பது மடமையடா, செல்லாத நோட்டு பிரச்சனைக்கு நடுவிலும் செல்லுபடியானதுதான் பெரிய ஆச்சர்யம்.

படம் ஹிட். கலெக்சனும் சூப்பர் என்பதால், மறுபடியும் சிம்புவின் தெம்பில் நாலைந்து லிட்டர் ஒட்டகப் பால் கலந்து விட்டது.

இது போதாதா? காதும் காதும் வைத்த மாதிரி  சிலர் மட்டும் கூடி  அச்சம் என்பது மடமையடா பட சக்சஸ் மீட்டை ஜமாய்த்துவிட்டார்கள்.

அங்குதான் ஒரு புறம் த்ரிஷாவும், இன்னொருபுறம் வரலட்சுமியுமாக சிம்புவை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஒரு செல்ஃபி எடுத்தார்கள்.

வெளியிட்டது ??

சூடோடு சூடாக அதை சிம்பு வெளியிட்டு இருந்தால் கூட மன்னித்துவிடலாம். வெளியிட்டது விஷாலின் வருங்காலம் வரலட்சுமி.

உடனே சோடி மாறிடுச்சோ என கமெண்ட் அடித்து வருகிறது கோடம்பாக்கம். 

www.tamilcheithi.com