ஈஷா அவுட்ரீச் நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்..!

42
609
ஈஷா அவுட்ரீச் நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்..!
Advertisement

ஈஷா அவுட்ரீச் நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்..!

Advertisement

ஈஷா அவுட்ரீச் ,சோழா குழுமம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும்,

இலவச கண் சிகிச்சை முகாம் (ஆகஸ்ட் 13) வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஷா யோகா மையம் அருகில் உள்ள,

தேவராயபுரம் கிராமத்தின்  சமுதாய கூடத்தில் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கண்களில் புரை உண்டாகுதல்,மாறுகண், நீர் அழுத்த நோய், மாலைக்கண்,

சீழ் மற்றும் நீர் வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற பிரச்சனைகளுக்கு இலவச பரிசோதனை செய்யப்படும்.

 கண் புரை நோயாளிகள் முகாமிலிருந்து  கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார்கள்.

இவர்களுக்கு I.O.I.லென்ஸ்,சிகிச்சை,மருந்து,தங்கும் வசதி,உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிட்டப்பார்வை,தூரப்பார்வை,வெள்ளெழுத்து போன்ற பார்வைக்கோளாறு இருப்பவர்களுக்கு மிக குறைந்த விலையில் தரமான கண் கண்ணாடி வழங்கப்படும்.

முகாமிற்கு வருபவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும்.

மேலும் வீட்டு முகவரியை எழுதி எடுத்து வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ளவும் மேலும் விவரங்களுக்கு கீழுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

09442590021

0422-2651298

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119