உள்ளங்கையில் இலவச ஆலோசனை…! கரும்பு விவசாயிகளுக்கு…! Dr.ரெஜீலா சாந்தி…

Dr.ரெஜீலா சாந்தி

0
484
Advertisement

கரும்பு விவசாயிகளுக்குசுபுதிய மொபைல் ஆப் அறிமுகம்.!

Advertisement

விவசாயிகள் கரும்புகளை பற்றி,உள்ளங்கை தெரிந்து கொள்ள, ‘கரும்பு ஆலோசகர்’ என்ற புதிய மொபைல் செயலியை, கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி கழகம் சமிபத்தில் அறிமுகம் செய்து வைத்தது.

இந்த அற்புதமான “கரும்பு ஆலோசகர்” என்ற மொபைல் ஆப் (செயலி) பை, கரும்பு ஆராய்ச்சி விஞ்ஞானி Dr.ரெஜீலா சாந்தி, அவரது குழுவினர்கள் 15 மாதங்களாக ஆராய்ந்து விவசாயிகள், எளிமையாக பயன்படுத்தும் வகையில், இந்த செல் போன் செயலியை கண்டுபிடித்து அறிமுகம் செய்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி Dr.ரெஜீலா சாந்தி நமது “தமிழ்செய்தி” வாசகர்களுக்காக அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது…!

இந்தியா முழுவதும், 5 மில்லியன் கரும்பு விவசாயிகள் உள்ளனர். இவர்களிடம், கரும்புகளைப் பற்றி நேரடியாக தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதால், இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

செயலி, கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு, புதிய தொழில் நுட்ப முறைகள் மற்றும் புதிய கரும்பு வகைகளை, அறிமுகம் செய்து, கரும்பு இனப்பெருக்கத்திற்காக, பல்வேறு யுக்திகளை செயல்படுத்தி வருகிறது.

கரும்பு வளர்ப்பு முறையில், ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், தங்களது விளை நிலத்தில், விளையும் கரும்புகளை போட்டோ எடுத்து, இந்த செயலி மூலமாக அனுப்பலாம்.

அதை எங்கள் நிபுணர் குழு, தகுந்த முறையில் ஆராய்ந்து, ஆலோசனைக் கூறுவர்கள். மேலும், விவசாயிகள் கரும்பு வளர்ப்பு சார்ந்த கேள்விகளை, இந்த செயலி மூலமாகவே கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தங்களது மொபைலில் கூகுல் பிளே ஸ்டோரில் சென்று, ‘கேன் அட்வைசர்’ என்ற ஆன்ட்ராய்டு ஆப்சனில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் Dr.ரெஜீலா சாந்தி.