தமிழகத்தில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்…!

0
122
தமிழகத்தில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்...!
Advertisement
Advertisement

நான்கு வருட இடைவேளைக்கு பிறகு தமிழகத்தில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 4 வருடங்களாக புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளை பெற்றோர்கள் நாடினர்.

இந்நிலையில் தமிழத்தில் புதியதாக 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி கோவை ( கிட்டம்பாளையம் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் கேம்பஸ்), மதுரை ( இடையப்பட்டி இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் கேம்பஸ் ) சிவகங்கை (இலுப்பைக்குடி இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் கேம்பஸ்) மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் இந்த பள்ளிகள் அமைய உள்ளன.

கோவை, மதுரை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் அமையும் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

உடுமலைப்பேட்டையில் அமையும் பள்ளிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால் 4000 மாணவர்கள் பயனடைவார்கள் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 42 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம் 64,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தை சேர்ந்த எஸ்.அருமைநாதன் கூறுகையில்

’மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் மட்டும்தான் இங்கே படிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்திய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில், மற்ற மாணவர்களும் இங்கே கல்வி கற்க முடியும்’’ என்று தெரிவித்தார்.