முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்..!

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்..!
Advertisement
Advertisement

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார்.

கடந்த 1930ம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) .

இவர் ரயில்வே ஊழியராக இருந்த போது பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து 1977ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வானார்.

அதன் பின்னர், 1989 மற்றும் 1990ம் ஆண்டுகளில் ரயில்வே அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

இதையடுத்து, 2000ம் ஆண்டு மத்தியில் அமைந்த பாஜக அரசில் இருந்த போது பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

அதன் பிறகு, தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு வரை பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.