மானை வேட்டையாடிய சமைத்த 5 பேர் கைது!

மானை வேட்டையாடிய சமைத்த 5 பேர் கைது!
Advertisement
Advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, மானை வேட்டையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் காப்பு காட்டில் மானை வேட்டையாடி சமைத்து கொண்டிருப்பதாக பேர்னாம்பட் வனத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

இதன் அடிப்படையில், வனச்சரகர் சங்கரய்யா தலைமையிலான வன குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மானை வேட்டியாடி சமைத்து கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மானை வேட்டையாடியவர்கள் பேர்ணாம்பட் அடுத்த ஏரிகுத்தி பகுதியை சேர்ந்த மணி, வெங்கடேசன், கஜேந்திரன், தேவராஜ் முனியப்பன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 கிலோ மான் கறி மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேர்னாம்பட் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.