பள்ளியில் தீ விபத்து..! 25 பேர் பலி..!

32
541
பள்ளியில் தீ விபத்து..! 25 பேர் பலி..!
Advertisement

பள்ளியில் தீ விபத்து..! 25 பேர் பலி..!

Advertisement

மலேசியாவில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

“மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள தாருல் குரான் இட்டிஃபாகுயாக் என்ற மத போதனைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியின்  மேல் தளத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 25 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாக இருகக்லாம்.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

தீயணைப்பு அதிகாரிகள் கூறும்போது,

“கடந்த 20 வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்து இதுதான்.

தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்“ என்றார்.

கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.