ஜனவரி 31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

ஜனவரி 31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
Advertisement
Advertisement

ஜனவரி 31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.ஜனவரி 31-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

வாக்காளர் பட்டியலில் ஏதேனும் சந்தேகம், குறைகள் இருந்தால் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும்,

தாலுகா அலுவலகங்களில் திருத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம் என்று சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தேர்தல் அன்று தனியார் நிறுவனங்கள் கட்டாயம் விடுப்பு தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக இதுவரை பேரவை செயலாளரிடம் இருந்து அறிவிப்பு வரவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

பாலகிருஷ்ணா ரெட்டி தொகுதி குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் பட்சத்தில் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.