டெல்லியில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு… மீண்டும் போரட்டம் தொடங்குமா..?

44
614
டெல்லியில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு… மீண்டும் போரட்டம் தொடங்குமா..?
Advertisement

 டெல்லியில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு… மீண்டும் போரட்டம் தொடங்குமா..?

Advertisement

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 15 விவசாயிகள் இன்று டெல்லி செல்கின்றனர்.டெல்லியில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு… மீண்டும் போரட்டம் தொடங்குமா..?

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வங்கிகளில் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,

அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு பா.ஜ.கவைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்தன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும் மே 21-ம் தேதிக்குள் மத்திய அரசு உத்ரவாதம் ஏதும் அளிக்காதபட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடங்குவோம் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி போராடுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் மே 21-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள போராட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அய்யாக்கண்ணு திருச்சியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் தமிழக விவசாயிகள் 15 பேரும் உடன் சென்றனர். டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.