அ.தி.மு.க., சுக்கு நூறாகும்…!!! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

34
590
அ.தி.மு.க., சுக்கு நூறாகும்...!!! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
Advertisement

அ.தி.மு.க., சுக்கு நூறாகும்…!!! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Advertisement

ஜூன் 14ல் கூடும் சட்டசபையே எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இறுதிக் கூட்டமாக  இருக்கும்” என, தமிழக காங்., முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது:

அ.தி.மு.க., எப்போது சுக்கு நுாறாக உடையும் எனத் தெரியவில்லை. விரைவில் அது நடக்கும். சட்டசபை தேர்தல் வரும் சூழல் உள்ளது.

ஜூன் 14ல் கூட்டப்படும் சட்டசபைதான் பழனிசாமி அரசுக்கு இறுதிக் கூட்டமாக இருக்கும். விரைவில் டி.டி.வி. தினகரன் நிரந்தரமாக சிறைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும்.

கரும்பு விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கையான டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் ஆணையை முதல்வர் பழனிச்சாமி கடந்த 10 நாள்களுக்கும் மேலாக படித்து வருகிறார்.

அந்த ஆணை ஆங்கிலத்தில் இருப்பதால், ஆங்கிலம் கற்றுவிட்டு அவர் புரிந்து படிப்பார் என நினைக்கிறேன்.

கால்நடைகளை விற்பதற்கு, விதிக்கப்பட்ட தடையை விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர செலவுகளுக்கு விவசாயிகள் கால்நடைகளை விற்றுதான் சமாளிக்கின்றனர்.

தடையை திரும்ப பெறவில்லையெனில் ஒவ்வொரு கிராமத்திலும் போராட்டம் வெடிக்கும். மகளிர் காங்கிரஸ் என்றாலே தகராறுதான்.

முழு விபரம் தெரிந்து கொண்டு சொல்கிறேன். தவறாக கூறினால், மகளிர் என் மீது பாய்வதற்கும் வாய்ப்பு உண்டு என்றார்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119