மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!

42
643
மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!
Advertisement

மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!

Advertisement

தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகரம் அமைக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுக்கான,

ஜப்பான்-இந்திய நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ”கடந்த செப்டம்பர் 14-ம் தேதி காந்தி நகரில் நடந்த இந்திய-ஜப்பான் வணிக முன்னோடிகள் ஃபோரம் நிகழ்ச்சியில்,

தமிழகத்தில் ஜப்பான் தொழில் நகரம் அமைக்கப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டுக்கான ஜப்பான்-இந்திய நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்புகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.