பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

46
1123
பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!
Advertisement

பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

Advertisement

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் ஊராட்சிக்குட்பட்ட சூடியூர் கிராமத்தை சேர்ந்த முத்தழகு என்பவரின் மகன் செல்லம்பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி!

இவர் இன்று (2-8-2017) காலை 8:00 மணியளவில் தனது வீட்டில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார், இதனால் இவர் உடல் முழுவதும் நனைந்து இருந்தார்.

அப்போது, எரிந்து கொண்டிருந்த மின் விளக்கை அணைப்பதற்காக சுவிச்சை தொட்டார்,

உடல் முழுவதும் தண்ணீரில் நனைந்திருந்ததால் திடீரென மின்சாரம் பாய்ந்து பலியானார்.,

இவரது உடலை பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பார்த்திபனூர் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இறந்தவருக்கு மனைவி மற்றும்   திவாகரன்(9), ஓவியா(5), திகேஸ்(1)என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பார்த்திபனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

செய்திகள்:- பரமக்குடி முத்துகுமார்