முட்டை சமையல்-1

32
627
முட்டை
Advertisement

முட்டை & காலிஃப்ளவர் ஆம்லெட்

தேவையானவை: முட்டை
 
முட்டை – 5,
காலிஃப்ளவர் – 1,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன்,
மிளகுதூள் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு. 

Advertisement

செய்முறை: 

 
                        காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, உப்பு கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செயுங்கள். தண்டுகளே இல்லாமல், மேலிருக்கும் வெண்மையான பூக்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளுங்கள்.
 
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகுதூள், பொட்டுக்கடலை மாவு, மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் 2 டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
 
முட்டை களை உடைத்து அதில் ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காலி ஃப்ளவர் போட்டுக் கலந்து கொள்ளுங்கள்.
 
சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றியெடுத்துப் பரிமாறுங்கள். 
 

முட்டை & பிரெட் டோஸ்ட்

தேவையானவை:
 
ஸ்வீட் பிரெட் – 6 ஸ்லைஸ்,
முட்டை – 4,
பால் – ஒரு கப்,
சர்க்கரை – கால் கப் (இனிப்புச்சுவை அதிகம் வேண்டும் என்பவர்கள், சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம்),
நெய் – கால் கப். 

செய்முறை:
 
காய்ச்சிய பால், முட்டை, சர்க்கரை மூன்றையும் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
 
(கவனிக்கவும்: பால் நன்கு ஆறியிருக்கவேண்டும். சூடாக இருந்தால், முட்டை அந்த சூட்டுக்கு வெந்துவிடும்).
 
தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிது நெய் தடவி, ஒரு பிரெட்டை எடுத்து, முட்டை கலவையில் நனைத்தெடுத்து கல்லில் போட்டு, சுற்றிலும் நெய் ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்துப் பரிமாறுங்கள்.
 

முட்டை கொத்து பரோட்டா

 
தேவையானவை:
 
முட்டை – 3,
பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன்,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
தனியாதூள் – கால் டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – கால் டீஸ்பூன்,
பரோட்டா – 3,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை – 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
எண்ணெய் – தேவையான அளவு. 

செய்முறை:

 
பரோட்டாவை பொடிப் பொடியாக நறுக்குங்கள்.
வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
 
முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக்கொள்ளுங்கள். ஒரு கடாயில் நன்கு எண்ணெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்குங்கள்.
 
வதங்கிக் கொண்டிருக்கும்போதே, கரம் மசாலாதூள், மிளகாய்தூள், தனியாதூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறி, தக்காளியையும் போட்டுக் கிளறுங்கள்.
 
ஒரு கிளறு கிளறியபின், பரோட்டா துண்டுகளையும் போட்டுக் கிளறவேண்டும். பரோட்டா நன்கு சூடானதும், அடுப்பை ஸிம்மில் வைத்து, தோசைக்கரண்டியால் கொத்திக் கொத்திக் கிளறவேண்டும். 

பிறகு, அடித்து வைத்திருக்கும் முட்டையையும் பரவலாக ஊற்றி, நன்கு கொத்திக் கொத்திக் கிளறுங்கள். தக்காளி சேர்ந்திருப்பதால், ஓரளவுதான் உதிரும்.

 
நன்கு கிளறி, மல்லித்தழை தூவி, இறக்குங்கள். காரம் வேண்டு மென்றால், மிளகுதூள் தூவிக் கிளறிப் பரிமாறுங்கள்.
 
ஆனியன் ராய்த்தா, இதற்கு சூப்பர் காம்பினேஷன்.