ரூ.2000 உதவித் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தாா் முதல்வா்..!

ரூ.2000 உதவித் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தாா் முதல்வா்..!
Advertisement
Advertisement

வருமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமாா் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தாா்.

கஜா புயலின் தாக்கத்தாலும், போதிய மழையின்மை மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாகவும்,

தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று கடந்த மாதம் 11ம் தேதி முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மாவட்டத்திற்கு ஒருவா் வீதம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு,

தலா ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவிக்கான வங்கி சான்றிதழை வழங்கி முதல்வா் பழனிசாமி திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 2 ஆயிரம் ரூபாய் நிதி தொடா்ந்து செலுத்தப்படும். குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலேயே இந்த சிறப்பு நிதி செலுத்தப்பட உள்ளது.