குடி போதையில்…கொத்தனார் அடித்து கொலை …

குறிஞ்சிப்பாடி

0
279
Advertisement

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரியகண்ணாடி கிராமம் அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). கொத்தனார்.

இவர் குடிபோதையில் வீட்டில் இருந்தார். இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஜோதிமணி(45). இவரும் குடிபோதையில் இருந்தார்.  இருவருக்கும்  ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த ஜோதிமணி, கிழே கிடந்த செங்கல்லால் ரமேசின் மார்பில் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கொலை செய்த ஜோதிமணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ரமேசிற்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், தமிழ்நிலா(17), குணா(13) ஆகிய 2 மகள்களும், கமலநாதன்(15) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் செங்கல்லால் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

SHARE