ஆபரேஷனில் வயிற்றிலேயே விடப்பட்ட கத்தரிக்கோல்..!

0
101
ஆபரேஷனில் வயிற்றிலேயே விடப்பட்ட கத்தரிக்கோல்..!
Advertisement
Advertisement

தெலுங்கானா மாநிலம் மங்கலஹாட் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி சவுத்ரி(32). இவருக்கு ஹிரனியா நோய் பாதிப்பு இருந்துள்ளது.

இதற்காக ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்(NIMS) மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி ஆபரேஷன் செய்தனர். இதையடுத்து உடல்நலம் தேறி வந்தார்.

ஆனால் மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எனவே மருத்துவமனை சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர்.

அதில் வயிற்றில் நீளமான கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

முன்னதாக நிம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற ஆபரேஷனில் தவறுதலாக கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்துவிட்டு சென்றது கண்டறியப்பட்டது.

மிகவும் புகழ்பெற்ற நிம்ஸ் மருத்துவமனையில், இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோலை அகற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.