வெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்கள்: கூட்டணி குறித்து ஸ்டாலின் கருத்து…!

0
107
வெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்கள்: கூட்டணி குறித்து ஸ்டாலின் கருத்து...!
Advertisement
Advertisement

2009ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி மீண்டும் தோற்பதற்காக கூட்டணி வைத்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாமக கூட்டணி குறித்து முக ஸ்டாலின் பேசியதாவது:

2009ல் பாமக-அதிமுக கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆனால் அப்போது என்ன ஆனது என்று உங்களுக்கே தெரியும். அவர்களின் கூட்டணி படுதோல்வி அடைந்தது.

நான் அப்போது கூறினேன், 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோற்றார்கள் என்று.

ஏனென்றால் ராஜ்யசபா உறுப்பினர் என்பது இரண்டு எம்.பி களுக்கு சமம். அதனால் 7 தொகுதியில் தோற்று 9 இடங்களை இழந்ததாக கூறினேன்.

இதே போல் அண்மையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக.,வை விமர்சித்து அறிக்கை எல்லாம் வெளியிடவில்லை, ‘அதிமுகவின் கதை’ என புத்தகமே வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதிமுகவை விமர்சித்து எப்படி எல்லாமல் கடுமையாக விமர்சித்து வந்தார் அன்புமணி ராமதாஸ். ஆனால் தற்போது மீண்டும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இதனால் இவர்கள் இருவருக்கும் வெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்களாக உள்ளனர். என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.