மைத்துனரை நம்பி ஏமாந்த இயக்குநர் சங்கர் !

26
566
இயக்குநர் சங்கர்
Advertisement
Advertisement

இயக்குநர் சங்கர் எடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா? என்ற கேள்வியை எழுப்பிவிட்டது ‘2.0’ படத்தின் முதல் தோற்ற நிகழ்ச்சி.

இந்த நிகழ்வை அப்படியே யு ட்யூபில் லைவ்வாக நடத்த தீர்மானித்த ஷங்கர், அதற்கான ஏற்பாடுகளை தனது உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்தாராம்.

யு ட்யூபில் காத்துக் கிடந்த ரசிகர்கள்

உலகம் முழுக்க சுமார் 15 ஆயிரம் பேர்  யு ட்யூபுக்கு முன் காத்துக் கிடக்க, வெறும் விளம்பரங்கள் மட்டும்தான் ஓடிக் கொண்டிருந்தன.

சுமார் முக்கால் மணி நேரம் கழித்து எல்லாரும் மேடையை விட்டு கிளம்புகிற நேரத்தில்தான் யு ட்யூப் கண் திறந்தது.

கடுப்பான பல ரசிகர்கள், கண்டபடி திட்டிக்கொண்டே மானிட்டரை குளோஸ் பண்ணி இருந்தார்கள்

www.tamilcheithi.com