ஹீரோவாகும் இயக்குனர் கவுதம் மேனன்..!

ஹீரோவாகும் இயக்குனர் கவுதம் மேனன்..!
Advertisement
Advertisement

இயக்குனர் கவுதம் மேனன்அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளார்.

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் கவுதம் மேனன். இவரது படங்களுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. பெரும்பாலும், காதலை மையப்படுத்தி இவரது படம் வெளியாகும்.

தற்போது தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் விக்ரமைக் கொண்டு துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

தனது படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வந்த இயக்குனர் கவுதம் மேனன், கோலி சோடா 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.

இந்த நிலையில், தற்போது ஹீரோவாக அவதாரம் எடுக்க உள்ளார். அறிமுக இயக்குனர் ஜெய் பரமசிவம் இயக்கும் புதிய படத்தில் கவுதம் மேனன் தான் ஹீரோ என்று கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. அதற்கு முன்னதாக, நாச்சியார் படத்தின் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்த இவனா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படம் குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.