டிப்ளமோ படிப்புகள் – 6

30
615
டிப்ளமோ
Advertisement

சிவில் இன்ஜினியரிங்

Advertisement

கட்டடங்கள், அணைகள், பாலங்கள் முதலியவற்றை வடிவமைத்து, கட்டுமானப்பணியில் ஈடுபடுவதற்கான இன்ஜினியரிங் படிப்பை இந்த டிப்ளமோ கற்றுத் தருகிறது.

230 ஆண்டுகளுக்கு முன்பு கட்டட கலை வளர்ச்சியடையாத காலத்தில், மனிதன் அணைகள், கழிவு பாதைகளை கட்டினான்.

ஆனால் இப்போது இத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி புகுந்துவிட்டது. ரோடு அமைத்தல், விமான நிலையங்கள் பராமரிப்பு, துறைமுகம் வளர்ச்சி பணி, உயர்ந்த கட்டடங்களை வடிவமைப்பது, பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல், நீர் கழிவை அகற்றி சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் முதலிய பணிகளிலும் நவீன கட்டடக் கலை நுட்பங்கள் பயன்படுகின்றன.

கிளினிக்கல் டயடிக்ஸ்

மனிதன் நோயின்றி வாழ்வதில் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடற்கூறியல், உயிர் வேதியியல், உணவூட்ட உடற்கூறியல், நோய் அறிவியல், உணவு அறிவியல் ஆகியவை சார்ந்த படிப்பாக இந்த டிப்ளமோ உள்ளது.

உணவுப் பழக்கங்களுக்கும், நீண்ட கால நோய்களுக்கும் உள்ள தொடர்பு, உணவுப் பழக்கம் தொடர்பான நடைமுறைகள் போன்றவை பற்றி இதில் விளக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கு உணவுப் பழக்கவழக்க விதிமுறைகளில், அட்டவணைப்படுத்தல், உணவூட்ட அளவீடுகள், ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டுபிடித்தல், தேவைப்படும் ஆற்றலை அளவிடுதல் உள்ளிட்ட நடைமுறைகளில் தேவையான பயிற்சியை அளிப்பதாக இந்த டிப்ளமோ அமைந்துள்ளது.

நோயாளிகளுக்கு தேவையான உணவுகளையும், மருந்துகளையும் பரிந்துரை செய்வதிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை

நோயாளிகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பராமரிப்பு, உணவு தயாரிப்பை மேற்பார்வையிடுதல், உணவு பரிமாறும் முறைகள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் பாடத்திட்டமாகும்.

நோயாளிக்கு, நோயின் தன்மைக்கு ஏற்ப உணவு வகைகளை தேர்ந்தெடுத்து வழங்கும் ஆலோசனைகளை இந்த பாடத்திட்டம் கற்றுத்தருகிறது.

கூட்டுறவு

பொருளாதாரம் மற்றும் சமூகத்தை பலப்படுத்துவதாக கூட்டுறவு அமைகிறது. மக்கள் பங்கேற்கும் அரசு கூட்டுறவு முயற்சி, மக்கள் மக்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டுறவு முயற்சி பற்றியும் மாணவர்கள் இப்பாடப்பிரிவில் அறிந்து கொள்கின்றனர்.

இந்தியாவின் முதுகெலும்பான கிராமப் புறங்களில் கூட்டுறவு துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் – டிப்ளமோ

தகவல் தொழில்நுட்பத்தில் நவீன வர்த்தக நிர்வாகத்திற்கு தேவையான நெட்வொர்க்கிங், சிஸ்டம் சாப்ட்வேர், அப்ளிகேஷன் சாப்ட்வேர், இன்டர்நெட் போன்ற பிரிவுகளில் இந்த டிப்ளமோ படிப்பு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.

இத்துறையில் படிப்பதால் கம்ப்யூட்டர் உலகில் ஏற்படும் நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.