பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது- டி.டி.வி.தினகரன்…!

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது- டி.டி.வி.தினகரன்...!
Advertisement
Advertisement

வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கிறார்கள்.

அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என்று தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?

விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு எங்கள் கட்சி ஆதரிக்கும். நாங்கள் எப்போதும் விவசாயிகளின் நண்பனாகவே இருப்போம்.

பட்ஜெட்டில் தூர்வார 300 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். மேட்டூர் அணை நீர் கடலில் கலந்ததுதான் மிச்சம்.

ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ.. அதை எல்லாவற்றையும் இந்த அரசு ஆதரிக்கிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கிறார்கள். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்களுக்கு கொஞ்சம்.. கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

திருவாரூர் சட்டசபை தொகுதி இடை தேர்தலில் ஒன்றிய செயலாளரை தான் அவர் போட்டியிட முடிவு செய்தார்.

இதனால் அவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் இவ்வாறு தினகரன் கூறினார்.