10 வகை பிரதோச வழிபாடுகள்..!

36
558
10 வகை பிரதோச வழிபாடுகள்..!
Advertisement

10 வகை பிரதோச வழிபாடுகள்..!

Advertisement

பிரதோச வழிபாடு சிவவழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள்.  10 வகை பிரதோச வழிபாடுகள்..!

பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

தியோதசி திதியன்று மாலை 4 – 6 மணி வரை உள்ள நேரமாகும். அமாவாசையிலிருந்து 13-ம் நாளும் பவுர்ணமியிலிருந்து 13-ம் நாளும் திரயோதசி திதியாகும்.

மாதத்தில் இரண்டு பிரதோசம் வருகிறது.

பிரதோசத்தில் பத்து வகையுண்டு:

  1. நித்தியபிரதோசம்: தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம்
  2. நடசத்திர பிரதோசம்: திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.
  3. பட்சபிரதோசம்: சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்சலிங்க வழிபாடு செய்வது.
  4. மாதப் பிரதோசம்: கிருஸ்ண பட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது.
  5. பூர்ண பிரதோசம்: திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது. சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
  6. திவ்ய பிரதோசம்: துவாதசியும் திரயோதசியும் அல்லது திரயோதசியும் சதுர்த்தியும் ஆக இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.
  7. அபய பிரதோசம்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது.
  8. தீபப் பிரதோசம்: திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலங்களில் தீப அலங்காரங்கள் செய்வது.

பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது.

  1. சப்த பிரதோசம்: திரயோதசி திதியில் நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.
  2. மகா பிரதோசம்: ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும்.

சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.

தேய்பிறை பிரதோசம்: ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது ராகு காலமும் பிரதோச வேளையும் கூடி வரும் 4.30-6.00 மணி வரையிலான காலத்தில்,

மேலே குறிப்பிட்ட வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுபவர்களுக்கு முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும்.

108 பிரதோச பூஜை செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும்.

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119