எஸ்மா…வால்! போராட்டம்..புஸ்…!

9
338
எஸ்மா...வால்! போராட்டம்..புஸ்...! அரசு போக்குவரத்து ஊழியர்கள் களின், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட பிரமாண்டமான போராட்டம்..! புஸ்வானமாகிப் போனது. அதன் காரண கர்த்தா எஸ்மா....எஸ்மா....!!! இந்த எஸ்மா.. பிளாஸ்பேக்... இது தான்...! அப்போதைய செல்வி.ஜெயாவாக இருந்து, முதல்வராக பொறுப்பு வகித்தவர். எஸ்மா....! எஸ்மா....! என்று இந்த சட்டத்தை கையில் எடுத்து, அதையே சாட்டையாக்கி சுழற்றி.. சுழுக்கு எடுத்தார். அதன் பிறகு தான் எஸ்மா...எஸ்மா என்று கோஷம் போட்ட அரசு ஊழியர்கள் கடைசி... நேரத்தில், அம்மா...அம்மா.. உன்னை விட்டால் வேறு கதி ஏது அம்மா
Advertisement

எஸ்மா…வால்! போராட்டம்..புஸ்…!

Advertisement

அரசு போக்குவரத்து ஊழியர்கள் களின், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட பிரமாண்டமான போராட்டம்..!

புஸ்வானமாகிப் போனது. அதன் காரண கர்த்தா எஸ்மா….எஸ்மா….!!!

இந்த எஸ்மா.. பிளாஸ்பேக்… இது தான்…!

அப்போதைய செல்வி.ஜெயாவாக இருந்து, முதல்வராக பொறுப்பு வகித்தவர்.

எஸ்மா….! எஸ்மா….! என்று இந்த சட்டத்தை கையில் எடுத்து, அதையே சாட்டையாக்கி சுழற்றி.. சுழுக்கு எடுத்தார்.

அதன் பிறகு தான் எஸ்மா…எஸ்மா என்று கோஷம் போட்ட அரசு ஊழியர்கள் கடைசி… நேரத்தில்,

அம்மா…அம்மா.. உன்னை விட்டால் வேறு கதி ஏது அம்மா” என்று தாலாட்டு பாடினார்கள், என்பது சரித்திர உண்மைகள்.

அதன் பிறகு தான் ஒட்டுமொத்த தமிழகத்தையே அம்மாசாமி வேஷம் போடவைத்த வரலாறு இன்றைய இளம் தலைமுறைகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் மானம் ரோஷம் உள்ள எந்த தமிழனும்  அதுவும் அரசு ஊழியர்கள் மறந்து இருக்க கூடாது. அந்த அடக்குமுறை இந்த சுதந்திர நாட்டில் வரலாற்று பிழை என்பதையும் தாண்டி,

அதை சாதனையாக பதிவு செய்ததை, நமது வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

அப்படிப்பட்ட கடுமையான வேதனையான, அவமானங்கள், துயரங்களுக்கு, பிறகும் மனம் தளராத விக்கரமாதித்தன் வேதாளத்தை சுமந்த கதையாக, 

தங்களது வாரிசுகளின் எதிர் காலம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல். அரசாங்க வேலைக்காக பல..பல..லட்சங்களை லஞ்சமாக கொட்டி அரசுக்கு அடிமைகளாக்கிய, 

எஸ்மா புகழ்….! முன்னால் அரசு ஊழியர்களை என்னவென்று சொல்வது…!?!

அந்த புகழ்பெற்ற எஸ்மா சட்டம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுத்தது.

அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன.

மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது.

அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான் என்கின்றது எஸ்மா.

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை வாரண்ட் ஏதுமின்றி கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டாம்.!

அரசு ஊழியர்கள் எனில் பணி நீக்கம், அத்தியாவசிய சேவைத்துறையில் உள்ள பிற தொழிலாளர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

2002-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்த போது,

சுமார் 2 லட்சம் பேரை அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பணி நீக்கம் செய்தது இச்சட்டத்தை பயன்படுத்தியே.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே, நீக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்தவர்களின் அலட்சியத்தின் காரணமாகத்தான் போக்குவரத்து கழகம் சர்வ நாசமானது.

இதனால்.. நேர்மையான முறையில் பணியில் சேர்ந்த விசுவாசமான அரசு ஊழியர்களும் தற்போது எஸ்மா பிடியில் நசுங்குவார்களா..? என்பது தான் நமது சந்தேகம்..!

இன்று..அம்மா தான் இல்லை ஆனால்..! எல்லாம் வல்ல எஸ்மா இருப்பதிருப்பதை, தொழில் சங்கம்கள் ஏன் மறந்தது…?

எஸ்மா.. எனும் ஏவுகணை எந்த நேரத்திலும் பாயலாம்…!  என்பதை யார் மறத்தார்கள்..? தோழர்களே… சிந்திப்பீர்….!!!!!!

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பெரு விழா