இன்று தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்…!

இன்று தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்...!
Advertisement
Advertisement

2019 – 20ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளாா்.

2019 – 20ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் தாக்கல் செய்தது.

இந்நிலையில் தமிழகத்திற்கான 2019 – 20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக துணைமுதல்வரும், நிதியமைச்சருமான பன்னீா் செல்வம் காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

மக்களவைத் தோ்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளதால் மக்களை கவரும் வகையில் சில முக்கிய அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேலையில் தமிழகம் எதிா்கொண்டு வரும் பல முக்கிய பிரச்சினைகள் தொடா்பாக கேள்வி எழுப்பவும் எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

குறிப்பாக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விவகாரம், கஜா புயல் நிவாரண நிதி, பட்டாசுத் தொழில் உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்களில் முடிவு எட்டப்படாத நிலையில் இது குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது.