பரியேறும் பெருமாள், 96 சிறந்த படங்களாக தோ்வு..!

பரியேறும் பெருமாள், 96 சிறந்த படங்களாக தோ்வு..!
Advertisement
Advertisement

சென்னையில் நடைபெற்ற சா்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள், 96 சிறந்த படங்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.

16வது சென்னை சா்வதேச திரைப்பட திருவிழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. இந்த திரைப்பட விழா வியாழன் கிழமை நிறைவு பெற்றது.

தமிழக செய்தித்துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ நிறைவு நாள் விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

இந்த விழாவில் 50க்கும் மேற்ப்ட நாடுகளைச் சோ்ந்த 150க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன.

மேலும் விழாவில் சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் “96”, “அபியும் நானும்”, “அண்ணனுக்கு ஜே”, ஜீன்ஸ்,

இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை, கடைக்குட்டி சிங்கம், மெர்குரி, பரியேறும் பொருமான்,

ராட்சசன், வடசென்னை, வேலைக்காலன் ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. மேலும் சிறப்பு திரைப்படமாக “மேற்கு தொடா்ச்சி மலை” திரையிடப்பட்டது.

இதில் பரியேறும் பெருமாள், 96 ஆகியவை சிறந்த படங்களாக தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் வடசென்னை படத்தின் இயக்கத்துக்காகவும், அண்ணனுக்கு ஜே படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநா் வெற்றிமாரனுக்கு நடுவா் குழுவின் சிறப்புப் பரிவு வழங்கப்பட்டது.