மதுரையில் நாட்டு வெடிகுண்டு: காவல்துறை விசாரணை..!

மதுரையில் நாட்டு வெடிகுண்டு: காவல்துறை விசாரணை..!
Advertisement
Advertisement

மதுரை பழங்காநத்தம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பலத்த சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்த நிலையில் காவல் துறையினா் இது குறித்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து போடிக்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், இரும்பு கம்பிகள், ஜல்லி கற்கள் உள்ளிட்டவை குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் பெரிய அளவில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இன்று அதிகாரை பழங்காநத்தத்தை அடுத்த மகாலட்சுமி நகா் அருகே உள்ள தண்டவாளம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

வெடிச்சத்தம் கேட்டு அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தொிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினா்.

மேலும் சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேமித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.