சட்டீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது

சட்டீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது
Advertisement
Advertisement

சத்தீஸ்கரில் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

90 சட்டசபைகள் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவ.,12 மற்றும் 20 தேதிகளி்ல தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன.

இதில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் பா.ஜ., 24 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. முதல்வர் ரமன் சிங்கிற்கு, ராஜ்நந்தகோவான் தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

200 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு கடந்த 7 ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பா.ஜ.,வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் துவக்கம் முதலே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது.

இதனால், அங்கு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 90, தொகுதிகளிலும், பா.ஜ., 74 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

முதல்வர் வசுந்தரா ராஜே, காங்கிரசின் சச்சின் பைலட், அசோக் கெலாட் முன்னிலையில் உள்ளனர்.