கோவை அரசு அச்சகம்….மூடுவிழா…மத்திய அரசு அதிரடி…

ஜனவரி 31 ஆம் தேதியோடு

0
271
Advertisement

மத்திய அரசு அறிவித்துவிட்டது

Advertisement

கோவையில் இயங்கிவரும் மத்தியஅரசு அச்சகத்தை வரும் ஜனவரி 31 ஆம் தேதியோடு முழுமையாக இழுத்து மூடுவதாக மத்திய அரசு அறிவித்துவிட்டது.

1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அச்சகத்திற்கு சொந்தமான 132.7 ஏக்கர் நிலமும் கோவை பகுதி மக்களிடம் வேலைவாய்ப்பு ஆசைகாட்டி ஏக்கருக்கு 35 ருபாய் கொடுத்து அடிமாட்டு விளையில் வாங்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஆயிரக்கனக்கான வேலைவாப்பு அளித்த மத்திய அச்சக நிறுவனத்தில் தற்போது 65 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த அச்சகத்தில் உள்ள இயந்திரங்கள் மற்றும் பொருள்கள் அனைத்தும் கடத்தி செல்லப்பட்டு நாசிக்கில் உள்ள வடமாநிலத்து அச்சகத்தோடு இணைக்கப்பட உள்ளது.
இங்கு வேலைசெய்யும் தொழிலாளர்களையும் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நாசிக்கில் பணியில் சேருமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள இந்த அச்சகத்தை மத்திய அரசு ஏன் மூட வேண்டும்?.

இந்த அச்சகம் நஷ்டத்தில் இயங்குகிறதா?  என்றால் அதுவும் இல்லை.

இந்த அச்சகமானது 65 பணியாளர்கள் இருந்தாலும் ஆண்டுக்கு 2 கோடி ருபாய் லாபத்தில் இயங்கி வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஜாப் ஆர்டர்களை வைத்துள்ளது.

அப்படி இருந்தும் தமிழர்களின் உரிமைகளையும் வளங்களையும் தொடர்த்து பறித்துவரும் அவலத்தின் தொடர்ச்சியாய் இதை மூடும்  போக்கினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்துக்கட்சிகள், இயக்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு அதை கொஞ்சம் கூட மதிக்கவில்லை.
தமிழக அரசும் அச்சகத்தை காக்க எள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

இது குறித்து அச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்களின், வாழ்வாதார உரிமையை காப்பாற்ற போராட்டம் செய்யும் அரசியல் கட்சியினர்களிடம் நாம் பேசிய போது, அவர்களது ஒட்டுமொத்தமான கருத்துக்களில் கூறியதாவது.

இந்த அச்சகத்திற்கு சொந்தமான பகுதியில் இயங்கி தமிழக அரசுக்கு சொந்தமான அப்பகுதி நியாயவிலைக்கடையையும் சனவரி 31 க்குள் காலி செய்ய அறிவிப்பும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அச்சகத்திற்கு சொந்தான சொத்துகளை முழுவதும் மத்திய அரசே எடுத்துப்போக திட்டமிடப்கட்டுள்ளது என்றார்கள் மேலும் அவர்கள் கூறியதாவது முறையான நடவடிக்கைகளை பின்பற்றாமல் அச்சகத்தொழிலாளர்களுக்கு பல்வேறு சிக்கல் உருவாக்கி வயிற்றிலடித்ததுடன் தமிழ்மக்களிடமிருந்து வாங்கிய சொத்துக்களையும் தமிழருக்கில்லை என செய்துவிட்டது மத்திய அரசு…!

லட்சக்கனக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்கு ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவக்கித்தர வக்கில்லாமல் ஓரிரு வாய்ப்புகளை வழங்கிவரும் இது போன்ற பல நிருவனங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா நடத்துவது என்பது, தமிழர்விரோத போக்காகும் என்றார்கள்.

SHARE