அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் வேண்டுகோள்..!

அரசு ஊழியர்களுக்கு முதல்வரின் வேண்டுகோள்..!
Advertisement
Advertisement

அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

டிச.,4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.

இதனையடுத்து நேற்று தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து சென்னையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்.

போராட்டத்தினால், புயல் பாதித்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் பாதிக்கும்.

ஓய்வூதியம் குறித்து அமைக்கப்பட்ட குழு தற்போது தான் அறிக்கை அளித்துள்ளது. இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார்.