மின்வாரிய ஊழியர்களுக்கு முதல்வர் பாராட்டு..!

0
109
மின்வாரிய ஊழியர்களுக்கு முதல்வர் பாராட்டு..!
Advertisement
Advertisement

கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த முருகேசன், சண்முகம் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு பேரின் குடும்பத்திற்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.13 லட்சமும், மின்பகிர்மான கழகத்தின் நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் என தலா 15 லட்ச ரூபாய் வழங்கப்படும்.

இரண்டு பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

புயல் பாதிப்பு பகுதிகளில் இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து மின்ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சீரமைப்பு பணியில் உள்ள 24,941 மின் ஊழியர்களின் பணி மெச்சத்தக்கது என தெரிவித்துள்ளார்.