ஆனையூர் ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தூய்மை இந்திய திட்டம்..!

0
121
ஆனையூர் ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தூய்மை இந்திய திட்டம்..!
Advertisement
படவிளக்கம், (கேஎம்யு25கழிப்பறை) கமுதி அருகே உள்ள ஆனையூர் ஊராட்சியில் “கழிப்பறை இல்லாத வீட்டில் பெண் கொடுக்காதே’ என்ற வாசகங்கள் எழுதப்படுள்ளது.
கமுதி அருகே ஆனையூர் ஊராட்சியில் “கழிப்பறை இல்லாத வீட்டில் பெண் கொடுக்காதே’ என்ற,
கழிப்பறை விழிப்புணர்வை ஏற்படுத்தி தூய்மை இந்திய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க வேண்டும் என
பொதுமக்களுக்கு மானிய முறையில் ரூ. 12 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி சார்பில் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது.
பொரும்பாலான கிராமங்களில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாததாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இத்திட்டம் முழுமையாக சென்றடையவில்லை.
கடந்த 1 வருட காலமாக மத்திய அரசு அதிகாரிகளை தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்ட பின்னர்,
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விழித்துக் கொண்டு, கழிப்பறை இல்லாத வீடுகளை கணக்கெடுத்து இத்திட்டத்தை அவசரகதியில் பெயரளவில் செயல்படுத்தி வருகின்றனர்.
மானிய கழிப்பறை திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்திலும் வெறும் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் 90 சதவீதம் காட்சிப் பொருளாகவும், பழைய சாமான்களை அடைக்கும் குடோனாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  அவ்வப்போது ஆய்வுக்கு வரும் மத்திய அரசு அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் ஆலோசனையின் பேரில்
அவர்கள் அழைத்து செல்லும் ஊராட்சிகளில் மட்டும் ஆய்வு மேற்கொள்வதால் மற்ற ஊராட்சிகளில் உள்ள நிலைமை அறிய வாய்பில்லாமல் போய்விடுகிறது.
இதனால் மத்திய அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக ஊராட்சிகளில் சென்று ஆய்வு செய்தால் மட்டுமே இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்று தெரியவரும்.
இருந்த போதிலும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆனையூர் ஊராட்சியில் மானிய கழிப்பறை குறித்து,
விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் முழுமையாக ஊராட்சி சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கிராமத்தில் உள்ள அரசு, மற்றும் தனியார் வீடு, பள்ளி சுவர்களில் வித்தியாசமாக “”கழிப்பறை இல்லாத வீடுகளில் பெண் கொடுக்காதே” என்ற வாசகம் எழுத்தபட்டு வருகிறது.
இதனால் அக்கிராமத்தில் இதுவரை கழிப்பறை அமைக்கமல் இருந்த ஒரு சிலரும் கழிப்பறை அமைப்பதில் ஆர்வம்காட்டி ஊராட்சியில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இது அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது…
கழிப்பறை இல்லாமல் தஇரந்தவெளி கழிப்பறையை பயன்படுத்துவதால் பெண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு பாதுகாப்பு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் இது போன்ற பிரச்சனைகளால் கிரமாங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் வருகிறது.
எனவே அரசு வழங்கும் மானிய கழிப்பறை இருந்தால் மட்டுமே பெண்கள் திருமணத்திற்கு சம்மதிக்க முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
Advertisement