பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு சிக்கிய சின்னதம்பி..!

பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு சிக்கிய சின்னதம்பி..!
Advertisement
Advertisement

கோவை வனத்துறை ஊழியர்கள், பலாப்பழம் காண்பித்து அழைத்தபோது வந்த சின்னத்தம்பி யானைக்கு, மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

சின்னத்தம்பி யானையைப் பிடிப்பதற்காக அதிகாலை முதல் வனத்துறையினர் முயற்சி செய்தனர்.

ஆனால் சின்னத்தம்பி,  கரும்புக் காட்டுக்குள் இருந்ததால் வனத்துறையினர் மிகவும் சிரமப்பட்டனர்.

முதல் ஊசியை மருத்துவர் அசோகன் செலுத்தினார். அது, தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக, வனத்துறை ஆலோசகர் தங்கராஜ் பன்னீர்செல்வம் இரண்டாவது மயக்க ஊசியை செலுத்தினார்.

அது, சின்னத்தம்பியின் கால் பாதத்தில் குத்தியது. ஆனால், சின்னத்தம்பி தொடர்ந்து நடந்துகொண்டே இருந்ததால், அதுவும் வேலை செய்யவில்லை.

அசோகன் மற்றும் தங்கராஜ் பன்னீர்செல்வம் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, சின்னத்தம்பியை கரும்புக் காட்டுக்குள் இருந்து வெளியில் அழைத்து வர வனத்துறையினர் திட்டமிட்டனர்.

அதன்படி, சின்னத்தம்பிக்கு நன்கு பழக்கமுள்ள கோவை வனத்துறை ஊழியர்கள்மூலம்  பலாப்பழம் கொடுத்து வெளியில் அழைத்து வர முயற்சி செய்தனர்.

கோவை வனத்துறை ஊழியர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கும் சின்னத்தம்பி, அவர்கள் பலாப்பழம் காட்டி அழைத்ததும் வெளியில் வந்தது.

சின்னத்தம்பி பலாப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, 5-வது முறையாக எடுக்கப்பட்ட முயற்சியில்  மயக்க ஊசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.