வண்டலூர் பூங்காவில் காலிப்பணியிடம்..!

0
100
வண்டலூர் பூங்காவில் காலிப்பணியிடம்..!
Advertisement
Advertisement

சென்னை வண்டலூர் பூங்காவில் காலியாக உள்ள உதவி வரைஞர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இப்பூங்காவில் பணியாற்றிட தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : சென்னை வண்டலூர் பூங்கா

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவி வரைஞர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி : சிவில் பொறியியல் டிப்ளமோ, ஐடிஐ, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

முன் அனுபவம் : தேவை இல்லை

ஊதியம் : ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில் (தர ஊதியம் – ரூ.2,400)

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.aazp.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து,

அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Deputy Director, Arignar Anna Zoological Park (AAZP), Vandalur, Chennai – 600048.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.01.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு நடைமுறை : எழுத்துத் தேர்வு, வரைதல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 200

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய  https://www.aazp.in/adman-application/  என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.