ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை ஸ்பார்டன்ஸ்..!

0
137
ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை ஸ்பார்டன்ஸ்..!
Advertisement
Advertisement

கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணி அணிக்கு எதிரான அரையிறுதியில் ‘த்ரில்’ வெற்றி பெற்ற சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

ஐபிஎல்., வெற்றி பாணியில் இந்தியாவில் முதல் புரோ வாலிபால் லீக் தொடர் நடக்கிறது.

இதில் நேற்று நடந்த 2-வது அரை இறுதியில் சென்னை ஸ்பார்டன்ஸ்-கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் புள்ளிகள் எடுக்க, போட்டி போட்டது.

இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 16-14, 9-15, 10-15, 15-8, 15-13 என்ற செட் கணக்கில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றியை பதிவு செய்தது .

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஃபைனலுக்கு முன்னேறியது. தவிர, லீக் போட்டியில் கொச்சி அணியிடம் அடைந்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சார்பில் ருஷ்லான்ஸ் (17 புள்ளி), நவீன்ராஜா ஜேக்கப் (13 புள்ளி), ருடிவெரேப் (11 புள்ளி) அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு அளித்தனர்.

நாளை நடக்கும் ஃபைனலில் கோழிக்கோடு ஹீரோஸ் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.