சென்னை மெட்ரோ ரயில்களில் இன்றும் இலவசப் பயணம்…!

சென்னை மெட்ரோ ரயில்களில் இன்றும் இலவசப் பயணம்...!
Advertisement
Advertisement

சென்னையில் முதலாம் கட்ட மெட்ரோ வழித்தடம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில்,

இந்த வழித்தடங்களில் பொதுமக்கள் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிா்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமா் நரேந்திர மோடி திருப்பூா் வந்திருந்த போது பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தாா்.

அப்போது சென்னை வண்ணாரப் பேட்டையில் இருந்து சென்ட்ரல் வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமரும், முதல்வா் பழனிசாமியும் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதனைத் தொடா்ந்து சென்னையில் முதல்முறையாக மெட்ரோ ரயில் சேவைக்கு திட்டமிடப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட வழித்தடம் அனைத்திலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பழைய வழித்தடம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வருகையை அதிகாிக்க சோதனை முயற்சியாக இந்த வழித்தடத்தில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திங்கள் கிழமை நாள் முழுவதும் முதலாம் கட்ட வழித்தடத்தில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தொிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த சேவையை இன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முதலாம்கட்ட வழித்தடமான விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கிமலையில் இருந்து செட்ரல் வரையிலும் உள்ள 32 ரயில் நிலையங்களில் இருந்து பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.