சென்னை தினம் இன்று..!

0
384
சென்னை தினம் இன்று..!
Advertisement

சென்னை தினம் இன்று..!

Advertisement

சென்னை நகர் உருவாகியதாக கருதப்படும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

மெட்ராஸ் நகரமாக மாறியதன் துவக்கம். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியர்,

விஜயநகர பேரரசின் மன்னரான பெடா வெங்கட ராயா என்பவரிடம் வர்த்தக ஸ்தாபனமான ஜெயின் ஜார்ஜ் கோட்டை அமைக்க,

மூன்று சதுர மைல் அளவில், ஒரு இடத்தை சட்டப்படி உரிமையாக பெற்றதுதான்.

அந்த நாளான 1639 ஆகஸ்ட் 22ம் தேதிதான் மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாட துவங்கியது 2004 ம் ஆண்டிலிருந்துதான்.

இன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த தினம், முதலில் மயிலாப்பூர் தினமாக  கொண்டாடப்பட்டது.

அதன்பிறகு பிறகு, மெட்ராஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது. வழக்கமான விழா கொண்டாட்டங்கள் போலவே, மெட்ராஸ் தினமும் உள்ளது.

இந்த தினத்தை கொண்டாடியவர்கள் சுமார் நான்கு போட்டிகள் மட்டுமே நடத்தினர். 

ஆனால் இன்று மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு மாரத்தான், பாரம்பரிய நடனம், கட்டுரை, கவிதை, பேச்சு, ஓவியம்,

போட்டோ, கலாச்சார உணவுகள், புல்லெட் சுற்றுலா என  50க்கம் மேற்பட்ட விளையாட்டுகள் இடம்பெறுகிறது.

சென்னைக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரையில் இரண்டாவது இடத்தை மெரினாதான் வகிக்கிறது.

மெரினா கடற்கரை அவ்வளவு அழகும் அற்புதமும் கொண்டது. 

ஆனால், இந்தியர்களுடைய மனப்பான்மை என்னவோ, பெரிய நகரங்களையும் கட்டடங்களையும் நதிக்கரையில்தான் உருவாக்குவார்கள்.

கடற்கரை பகுதிகளை இந்தியர்கள் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

ஆங்கிலேயர்கள் மட்டும் இந்த கடற்கரை அழகை பார்த்து, ரசித்து பிடித்துப்போய் நகரமாக்கவில்லை என்றால், மெரினா இதுவரை மீனவர் ஊர்களாக மட்டுமே விளங்கி இருக்கும்.

ஜெயின் ஜார்ஜ் கோட்டைதான் மெட்ராசின் பிரதானம் ஆங்கிலேயர்கள்  தென்னிந்தியாவின் ஆட்சி தலைமையிடமாகவே மெட்ராஸ் மாறியது.

இதனை தொடர்ந்து முக்கிய அலுவலக கட்டடங்கள், நீதிமன்றம், போக்குவரத்து நிலையங்கள் என ஒவ்வொன்றாக வரத்துவங்கின.

அன்று விசாலமான தெருக்களும், பிரமாண்ட கட்டிடங்களும் அடையாளமான விளங்கின. இன்றுபோல அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்த ஜன நெருக்கடி மிகுந்த நகரமாக இல்லை.

இன்றுபோல ஊர்ந்து செல்லும் நெரிசல் மிகுந்த சாலைகளாக இருந்ததில்லை. ஒரு சில நூற்றாண்டுக்கு முன்னால்,

ஒரு சில கட்டடங்களோடு வெறிச்சோடி இருக்கும் பழைய படங்களை பார்க்கும் போது, மீண்டும் அந்த நிலைக்கு வர வாய்ப்பே இல்லையா என்ற ஏக்கம் நிச்சயமாக எழும். 

கூவம் அன்று நீராடும் நதியாக இருந்தது. படகு போக்குவரத்துகள் இருந்தன.

* உலகளவில் இன்று மிகவும் பிரப   லம் ஆகியுள்ள சென்னை ஆரம்பத்தில் மதராஸ் என அழைக்கப்பட்டது.

* மதராஸ பட்டினம் அல்லது சென்னப்பட்டினம் எனும் கிராமத்தை கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது.

* 17ம் நூற்றாண்டில், அதாவது 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி மதராஸ் பிறந்தது.

* சென்னைக்கு இன்று 379வது பிறந்த தினம்.

* சென்னை தினம் கொண்டாடும் ஐடியா 2004ம் ஆண்டுதான் தொடங்கியது.

* சென்னை தினத்தில், நகரம் முழுவதும் விழாக்கோலம், பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என அமர்க்களப்படும்.

* பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து, சென்னை தின கொண்டாட்டங்கள் செப்டம்பர் வரை தற்போது நீடித்துள்ளது.

* கிழக்கு கடற்கரை ஓரமாக, பிரான்சிஸ் டே எனும் ஆங்கிலேயரால் வாங்கப்பட்ட 3 சதுர மைல் நிலப்பரப்பு இன்று சென்னையாகி உள்ளது.

* தற்போது சட்டப்பேரவை செயல்படும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தான் அந்த சிறிய நிலப்பரப்பு.

* காலனி ஆதிக்கம் அங்கிருந்து பரவத் தொடங்கியதும், சென்னை விரிவடையத் தொடங்கியது.

* மூன்று நூற்றாண்டுகள் முடிந்த பின்னரே, சென்னை பிறந்த நாள் முதல் முறையாக அதிகாரபூர்வமாக கொண்டாடப்பட்டது.

* ஆங்கிலேயரும், குறிப்பிட்ட சில உயர் அந்தஸ்து பிரிவினரும் இதை கொண்டாடினர்.

* 1989ம் ஆண்டு நடந்த 350ம் ஆண்டு விமரிசையான கொண்டாட்டத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.

* 2007ம் ஆண்டு நடந்த சென்னை தினத்தில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

* காலனி பாரம்பரியமாக கருதி சென்னை தின கொண்டாட்டத்தை  தமிழக அரசு புறக்கணித்து வருகிறது.

* ஒரே தின கொண்டாட்டமாக 2004ல் தொடங்கிய சென்னை தினம், பின்னர் வாரக்கணக்கிலும், அதன் பின் 10 நாள், 15 நாள் என அதிகரித்தபடி உள்ளது