நாளும் ஒரு நட்சத்திரம்….! இன்றய நட்சத்திரம் திருவோணம்…(22)

நாளும் ஒரு நட்சத்திரம்....! இன்றய நட்சத்திரம் திருவோணம்...(22)
Advertisement
Advertisement

திருவோணம் நட்சத்திரப் பலன்கள்

மும்மூர்த்திகளில் ஒருவரான காக்கும் கடவுளான “ஸ்ரீ மகா விஷ்ணு” அவதரித்த நட்சத்திரம் இது. இதன் அதிபதி சந்திரன் ஆவார்.

இதில் பிறந்தவர்கள் நல்ல வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும். புதிய ஆடைகள் உடுத்துவதிலும் ஆர்வமுடன் இருப்பர். நல்ல அழகிய உதடும், சுருண்ட கேசமும் உடையவர்கள்.

பெண்களின் மீது பற்றும் பாசமும் உடையவர்கள். தன்னுடைய பொருள்களையே எப்பொழுதும் பெரிதாக மதிப்பர். கோப குணம் உடைய இவர்கள் நல்ல நண்பர்களை இழப்பர். மற்றவர்களை தூக்கி எறிந்து பேசுவர். எப்பொழுதும் சுறுசுறுப்பும் முயற்சியும் உடையவர்கள்.

திருவோணம் : 1ம் பாதம்

தயாள குணமும் நல்ல பேச்சாற்றலும் மிக்கவர்கள் கணவன் மேல் பற்றுள்ளவர்கள். புத்திர சோகம் உள்ளவர்கள்.

நல்ல சுறுசுறுப்பு உடைய இவர்கள் மற்றவர்கள் தங்களுக்குச் செய்த நன்றியை மறந்துவிடுவர். நல்ல சிவந்த உருவ அமைப்பை உடையவர்கள். மற்றவர்கள் பொருள்களை விரும்பாத மனம் உடையவர்கள்.

திருவோணம் : 2ம் பாதம்

மௌந்த உடலும் சிவந்த தேகமும் உடையவர்கள். நல்ல வேலைக்காரர்களை பெற்றவர்கள். எல்லாவிதக் காலங்களிலும் நன்கு தேர்ச்சிப் பெற்றவர்கள். மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாதவர்கள். உற்றார் உறவினர்களை அதிகம் நேசிப்பர் பெண்கள் விஷயத்தில் பலகீனமானவர்கள்.

திருவோணம் : 3ம் பாதம்

நல்ல சங்கீத ஞானம் உடையவர்கள். மனைவிக்கு கட்டுபட்டு நடப்பர். சமூகத்தில் நல்ல பெயர் அடையப் பெறுவர்.

வாழ்க்கையில் நல்ல லட்சியங்களை உடையவர்கள். மற்றவர்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் காணும் அற்பபுத்தி உள்ளவர்கள். பல வகைகளில் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதில் சமர்த்தர்.

திருவோணம் : 4ம் பாதம்

நல்ல பணமும் பெயரும் உள்ளவர்கள். எல்லா விஷயங்களையும் அறிந்த மகா கெட்டிக்காரர்கள். தன் கீழ் வேலை பார்ப்பவர்களை கொடுமைப்படுத்துவர்.

தங்களது புகழுக்ககாகப் பணத்தை செலவு செய்வர். விவசாயத்தில் ஈடுபாடு உடையவர்கள். அடிக்கடி கெட்டப் பெயர் வாங்குவர். கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்கள்.

தொகுப்பு:- சத்ர