நாளும் ஒரு நட்சத்திரம்…! இன்றய நட்சத்திரம் பூரட்டாதி….(25)

நாளும் ஒரு நட்சத்திரம்...! இன்றய நட்சத்திரம் பூரட்டாதி....(25)
Advertisement
Advertisement

பூரட்டாதி நட்சத்திரப் பலன்கள்

சகல செல்வங்களையும் வாரி வழங்கி இவ்வுலகில் சகல இன்பங்களையும் துய்க்க வைக்கும் குபேரன் உதித்த நட்சத்திரம். இதன் அதிபதி தேவர்களுக்கு எல்லாம் அதிபதியான “குருபகவான்” ஆவார்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல தெய்வ சிந்தனையும் ஆச்சார அனுஷ்டானங்களையும் அறிந்து இருப்பர். அதே சமயம் அதை நடை முறையில் கடைபிடிப்பார்களா என்று சந்தேகமே.

எதிரிகளை வெற்றி கொள்வர். பெண்களால் அவமானப்படுவர். மற்றவர்களின் பொருள்கள் மேல் பற்று கொள்வர். நல்ல சிவந்த உடலும் அழகிய கண்களும் உடையவர்கள். உஷ்ண சம்பந்தப்பட்ட நோயால் அவதியுறுவர்.

பூரட்டாதி : 1ம் பாதம்

அழகான இவர்கள் குரூரமானம் உடையவர்கள். தனக்கு வேண்டாதவர்களை ஒழித்துக் கட்டுவதில் வல்லவர்கள். வழக்குகளை வெல்வர். பெண்களால் விரும்பப்படுவர்.

மற்றவர்களை கொடுமைப்படுத்தி அதில் இன்பம் காண்பர். சகோதரிகளால் நன்மை அடைவர். எப்பாடுபட்டாவது தனது இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொள்வர்.

பூரட்டாதி : 2ம் பாதம்

நல்ல அழகிய முகமும் வசீகரமான தோற்றமும் உடையவர்கள் நிரந்தரமான வீடு மற்றும் நிலம் இல்லாதவர்கள் எதிரிகளை அழவைத்து பார்ப்பவர். மனதில் கெட்ட எண்ணத்தை வளர்ப்பவர்கள்.

பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடைய இவர்களை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏமாற்றுவார்கள்.

பூரட்டாதி : 3ம் பாதம்

நல்ல வித்வான்களாக விளங்குவார்கள். மற்றவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவர்.

தாம் எடுத்துக் கொண்ட காரியத்தை வெற்றிகரமான முடிக்கும் விருப்பம் உடையவர்கள் மற்றவர்களின் பொருள்கள் மீது பற்று உடையவர்கள். சுயதொழில் செய்வதில் நாட்டம் உடையவர்கள்.

பூரட்டாதி : 4ம் பாதம்

நல்ல அழகான தோற்றமுடைய இவர்கள் அரசு சார்ந்த இடங்களில் உயர்பதவியை அடைவர். தனது குடும்பம், ஜாதி கட்டுப்பாடுகலை விட்டுக் கொடுக்காதவர்கள்.

வெளிநாட்டில் வியாபாரம் செய்ய விரும்புவர். பொய் சொல்லி பிறர் பொருள்களை அபகரிக்க விரும்பாதவர்கள். பிறரைக் குறை கூறிக் கொண்டிருப்பர்.

தொகுப்பு:- சத்ர