நாளும் ஒரு நட்சத்திரம்…! இன்றய நட்சத்திரம் அஸ்த்தம்…. (13)

நாளும் ஒரு நட்சத்திரம்...! இன்றய நட்சத்திரம் அஸ்த்தம்.... (13)
Advertisement
Advertisement

அஸ்த்தம் நட்சத்திரப் பலன்கள்

சாஸ்தா அவதரித்த நட்ச்சத்திரம் இது. இதன் அதிபதி சந்திரன் ஆவார். இந்த நட்ச்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயுள்ளம் கொண்டவர்கள்.

நல்ல உணவை விரும்பும் சுபாவம் உடையவர்கள். நல்ல குரு பக்தி உடையவர்கள் மற்றவர்களை வணங்க செய்து வாழ்வர். கனிவான பேச்சும் தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவர்கள்.

எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க விரும்புவர். வார்த்தைகளை கடுமையாக பேசும் இவர்கள் மனைவிக்கு கட்டுப்பட்டவர்கள்.

வயது ஆக ஆக நல்ல தொழிலும், வருமானமும் பெருகி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவர். தோல் வியாதிகள் ஏற்படும் விடாமுயற்சி உடையவர்கள்.

அஸ்த்தம் : 1ம் பாதம்

எப்படிப்பட்ட காரியத்தையும் சீக்கிரமாகவும் வேகமாகவும் செயலாற்றும் திறன் உடையவர்கள் ஆயுள் தோஷம் உடையவர்கள் எப்பொழுதும் எதிரிகளை சந்தித்து கொண்டே இருக்கவும் அவர்களால் மன நிம்மதி குறைவும் ஏற்படும். எதிரிகளை ஒழிப்பதில் ஆர்வம் உடையவர்கள் கர்வம் உடையவர்கள்

அஸ்த்தம் : 2ம் பாதம்

சிறுவயதிலே தாயின் அன்பை இழப்பார்கள், அற்பபுத்தி உடையவர்கள் பிறருக்கு கோபம் வராமல் பேசி தங்கள் காரியங்களை சாதிப்பதில் சாமர்த்தியசாலிகள்.

பாட்டு கேளிக்கைகள் இவற்றில் ஈடுபட்டு ரசிப்பார்கள். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உடையவர்கள்.

அஸ்த்தம் : 3ம் பாதம்

நல்ல சுக போகங்களை அனுபவிக்க துடிப்பர் வியாபாரம் செயவதில் மனமும் எண்ணமும் துடிக்கும். தாயின் அன்பில் வளர்வர்.

வீணாக எதையும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள், தொழிலதிபர்களாக வர ஆசைப்படுவார்கள். தொழிற்சங்கத் தலைவராக வர விரும்புவர்.

அஸ்த்தம் : 4ம் பாதம்

எல்லோரிடத்திலும் உண்மையாகவும், அன்புடனும் நடந்து கொள்வர். மாமன் வீட்டாரிடம் மனக்கசப்பு கொள்வர். எல்லாவித சுக போகங்களையும் நன்கு அனுபவிப்பர்.

குடும்பத்தில் எப்பொழுதும் சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும் மற்றவர்களை மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்வர்

தொகுப்பு:- சத்ர