கோவை – திருப்பூர் வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்..!

0
118
கோவை – திருப்பூர் வழியாக செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்..!
Advertisement
Advertisement

சோமலூரிலிருந்து சூலூர் செல்லும் பாதையில்பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கோவை – திருப்பூர் வழியாகசெல்லும் ரயில்களின் நேரம்மாற்றப்பட்டுள்ளது.

சோமலூரிலிருந்து சூலூர் செல்லும் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவை – திருப்பூர் வழியாகசெல்லும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் இன்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிவரை நீடிக்கும்.

திங்கள், வியாழன், வெள்ளி,சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும் சேலம் – கோவை பயணிகள் ரயில் திருப்பூர்-சோமனூர் வழித்தடத்தில் பயணிக்கும்போது 80 நிமிடங்கள் தாமதமாகும்.

கோவை- பாலக்காடு பயணிகள் ரயில் வழக்கத்தைவிட80 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். இந்த பயணிகள் ரயில் இரவு 7.30 மணிக்கு கோவையிலிருந்துபுறப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி – பாலக்காடு பயணிகள் ரயில் திருப்பூர்-சோமனூர் வழித்தடத்தில் பயணிக்கும்போது 20 நிமிடங்கள் தாமதமாகும்.

சேலம் – கோவை பயணிகள்( செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது) ரயில் திருப்பூர்-சோமனூர் வழித்தடத்தில் பணிக்கும்போது 60 நிமிடங்கள் தாமதமாகும்.

குறிப்பாக பிலாஸ்பூர், எர்னாகுளம், ஜெய்பூரிலிருந்து புறப்படும் எல்லா ரயில்களும் திருப்பூர்-சோமனூர் வழித்தடத்தில் பணிக்கும்போது 20 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை தாமதமாகும்.