சந்திரபாபு நாயுடு தலைமையில் தர்ணா போராட்டம்…!

சந்திரபாபு நாயுடு தலைமையில் தர்ணா போராட்டம்...!
Advertisement
Advertisement

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக டில்லியில் பிரம்மாண்ட தர்ணா போராட்டத்தை நடத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.

டில்லியில் தர்ணா போராட்டம் நடத்துவதற்காக ஆந்திர அரசு சார்பில் அனந்தபுரம் மற்றும் சிகாகுளம் பகுதிகளில் இருந்து போராட்டக்காரர்கள் 2 ரயில்களில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதற்காக ஆந்திரா அரசு சார்பில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.

2 சிறப்பு ரயில்களில் 20 பெட்டிகளில் புறப்பட்டு செல்லும் போராட்டக்காரர்கள் பிப்.,10 ம் தேதி டில்லியை சென்றடைய உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு தலைமையில் பிப்.,11 அன்று டில்லியில் தர்ணா போராட்டம் நடக்க உள்ளதாக ஆந்திர அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்காக ரூ.1,12,16,465 நிதி ஒதுக்குவதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆந்திர பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தர்ணா போராட்டத்தில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.