மத்திய அரசு உதவியாளர் பணி

31
606
மத்திய அரசு
Advertisement
Advertisement

மத்திய அரசு க்குத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி., எனப்படும் தேர்வாணையம் ஆண்டு தோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது எம்.டி.எஸ்., (மல்டி டாஸ்கிங்) எனப்படும் பல்செயல் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

வயது தகுதி:

1.1.2017 தேதியின் அடிப்படையில் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை மூலமாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ssconline2.gov.in அல்லது http://sscregistration.nic.in என்னும் இரண்டு இணையதளங்களில் ஒன்றில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான முழு விபரங்களை டிச., 31ல் எஸ்.எஸ்.சி., வெளியிடுகிறது.

டிசம்பர் 31 முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.