இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை…!

இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வருகை...!
Advertisement
Advertisement

மக்களவை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு எட்டப்பட்ட பிறகு, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார்.

காலை 10.30 மணியளவில் மதுரைக்கு வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அதன்படி பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10.15 மணிக்கு தமிழகம் வருகிறார் அமித் ஷா.

பிறகு அருப்புக்கோட்டை சாலையில் உள்ள, சுப்புலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாஜக மக்களவை தேர்த பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இந்நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்தை பாஜக மாநில செயலர் ஸ்ரீநிவாசன், மாவட்ட தலைவர் மஹாசுசீந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். அதை தொடர்ந்து விமான நிலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டமும் நடந்தது.

இதில் ஆட்சியர் நடராஜன், விமான நிலைய இயக்குநர், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மெஹந்தி, புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் பட்டனம்காத்தான் பகுதிக்கு செல்லும் அமித் ஷா, நன்பகல் 12.30 மணியளவில் நடக்கு ‘ராமநாதபுரம் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதை தொடர்ந்து பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு அவர் செல்கிறார்.